/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : பிப் 01, 2024 12:35 PM
கரூர்,: 'இரண்டாம் நிலை காவலர் தேர்வில் உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை
காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள் உடற்தகுதித்தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, விண்ணப்பப் படிவத்துடன் இலவச உடற்தகுதிதேர்வில் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்
படுகின்றனர். இதில், கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், 04324- 223555 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது, 90038 51307 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு, அதில், கூறப்படுகிறது.