/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'

ADDED : அக் 30, 2024 01:29 AM
கரூர், அக். 30-
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005ன் -கீழ், ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடமாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது.
மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.----------------------------------------------------------------------------------- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு முதுநிலை தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 19 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நவ., 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.