/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நீதிபதிக்கு பாராட்டு விழா
/
குளித்தலை நீதிபதிக்கு பாராட்டு விழா
ADDED : மே 02, 2025 01:49 AM
குளித்தலை, குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண்டு விழா மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரகதீஸ்வரன் பணியிடம் மாற்றத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது.
வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். நீதிபதிகள் சப்-கோர்ட் முத்துசாமி, மாவட்ட உரிமையியல் தமிழரசி, கூடுதல் மாவட்ட நீதிபதி யுவாதிமரியா, குற்றவியல் நடுவர் சசிகலா ஆகியோர், பணியிடம் மாறி செல்லும் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரகதீஸ்வரன் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசினர். தொடர்ந்து மூத்த வக்கீல்கள் சங்க செயலாளர் சரவணன், இணை செயலாளர் ராஜகோபால், பொருளாளர் மாணிக்கவேல், துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பாராட்டி பேசினர்.
நிர்வாகிகள், குமாஸ்தாக்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.