/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் ஆயுத பூஜை: திருஷ்டி பொம்மைகள் விற்பனை அமோகம்
/
நெருங்கும் ஆயுத பூஜை: திருஷ்டி பொம்மைகள் விற்பனை அமோகம்
நெருங்கும் ஆயுத பூஜை: திருஷ்டி பொம்மைகள் விற்பனை அமோகம்
நெருங்கும் ஆயுத பூஜை: திருஷ்டி பொம்மைகள் விற்பனை அமோகம்
ADDED : அக் 09, 2024 12:55 AM
நெருங்கும் ஆயுத பூஜை: திருஷ்டி
பொம்மைகள் விற்பனை அமோகம்
கரூர், அக். 9-
ஆயுத பூஜை நெருங்கும் நிலை யில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், திருஷ்டி பொம்மைகள் விற்பனை ஜோராக நடக்கிறது.
நாடு முழுவதும் வரும், 11, 12ல் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி விழா நடக்கிறது. அப்போது, புதிய வர்த்தக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஓட்டல்கள், வீடுகளுக்கு பூஜை செய்து திருஷ்டி கழித்தல் என்ற பெயரில், பொதுமக்கள் பல ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.
வர்த்தக நகரான, கரூரில் சமீப காலமாக திருஷ்டி பொம்மைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட நபர்கள், டூவீலர்களிலும், நடந்து சென்றும் திருஷ்டி பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர். அதை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை யொட்டி வணிகர்கள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து, திருஷ்டி பொம்மை விற்பனையாளர்கள் கூறியதாவது: கடலில் கிடைக்கும் சங்குகளில், ஒரு வித காந்த சக்தி உள்ளது. அதேபோல், செம்பு தகட்டுக்கும் பார்ப்பவர்களின், மனதை திசை திருப்பும் சக்தி உள்ளது. அதன் மூலம், தயாரிக்கப்படும் திருஷ்டி பொம்மைகளை, 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, விலங்குகளின் உரோமங்கள் மூலம் தயாரிக்கப்படும் திருஷ்டி கயிறுகளுக்கு, கரூரில் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.