/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க அரவக்குறிச்சி விவசாயிகள் கோரிக்கை
/
பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க அரவக்குறிச்சி விவசாயிகள் கோரிக்கை
பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க அரவக்குறிச்சி விவசாயிகள் கோரிக்கை
பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க அரவக்குறிச்சி விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 31, 2025 06:05 AM
அரவக்குறிச்சி: விளைந்த பருத்தியை, உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல், அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் விற்பனை செய்யும் நிலை உள்ளதால், அரவக்குறிச்சியில் பருத்தி கொள்-முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, சின்ன-தாராபுரம், ராஜபுரம், சீரங்க கவுண்டனுார், நஞ்சை காளகுறிச்சி, தொக்குப்பட்டி, தொக்குப்பட்டிபுதுார், நம்பகவுண்டனுார், சின்னகவுண்டனுார், ஊத்துார், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விவ-சாயம் அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்று நீர் பாசனத்தில் ஆயிரக்கணக்-கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக பருத்தி சாகுபடியை நம்பி உள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதிகளில் விளையும் பருத்தியை விவசாயிகள் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்-டுள்ளது. இதனால், கரூருக்கு அருகே உள்ள மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பருத்தியை எடுத்-துச்சென்று விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து செலவு, தரகு செலவு உள்ளிட்ட கூடுதல் செல-வுகள் அதிகரித்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்-பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வெளியூருக்கு பருத்தியை கொண்டு செல்லும்போது, தரம் குறைத்து, எடையை குறைத்து வாங்குவது, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற பிரச்னைகளும் அடிக்கடி நிகழ்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்-கின்றனர். இதனால், உற்பத்தி செலவுக்கு ஏற்ற லாபம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் பொரு-ளாதார சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு, அரவக்குறிச்-சியில் அரசு சார்பில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு மற்றும் வேளாண்மைத்-துறை அதிகாரிகள் இப்பிரச்னையை உடனடியாக கவனத்தில் கொண்டு, அரவக்குறிச்சியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

