/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு
ADDED : டிச 03, 2025 07:47 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மூன்றாம் ஆண்டாக துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாணவர்களுடைய அறிவியல் திறனை வளர்க்கும் வகையில், ஆண்டுதோறும் துளிர் அறிவியல் திறனறிவு தேர்வை நடத்தி வருகிறது. 100 வினாக்களை கொண்ட தேர்வு அறிவியல், கணிதம், பொது அறிவு, மனத்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தேர்வில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு தமிழ் வழி மாணவருக்கு விஞ்ஞான துளிர் புத்தகம், ஆங்கில வழி மாணவர்களுக்கு ஜந்தர் மந்தர் புத்தகம் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் முதன்மை மதிப்பெண் பெறும் மாணவர்கள், அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த தேர்வு மூன்றாம் ஆண்டாக, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஜான் பாட்ஷா வழிகாட்டுதல்படி, தலைமையாசிரியர் சாகுல் அமீது தேர்வை தொடங்கி வைத்தார். கணித
பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு தேர்வறை கண்காணிப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராக வானவில் மன்ற பிரகலாவதியும் பணியாற்றினர். மாணவர் கள் ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் விடையளித்தனர்.

