sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு

/

இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு

இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு

இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு


ADDED : டிச 03, 2025 07:48 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை பார் அசோசியேஷன் சார்பில், அவசர பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இ-பைலிங் நடைமுறைகளில், உடனடியாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குளித்தலையிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட, கிருஷ்ணராயபுரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்திலும், சங்க உறுப்பினர்கள் அதிகம் செல்வதால், நீதிமன்றம் 5:30 மணியை தாண்டி இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இந்த நடைமுறையை உடனடியாக நீதிபதி கைவிட வேண்டும்.இப்பிரச்னையில் மாவட்ட நீதிபதி தலையிட்டு சரி செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற வளாகத்தில், 'சிசிடிவி' கேமரா உடனடியாக பொருத்த வேண்டும்.

இ-பைலிங் முறை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் 6ம் தேதி வரை குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன






      Dinamalar
      Follow us