/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்
/
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி மும்முரம்
ADDED : அக் 25, 2024 01:08 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில்
கொசு ஒழிப்பு பணி மும்முரம்
அரவக்குறிச்சி, அக். 25-
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்
நிலையில் பொதுமக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில், பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிர் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி, பொது மக்களிடையே துாய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.