/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராணுவ வீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு; கரூர் கலெக்டர் தொடங்கி வைப்பு
/
ராணுவ வீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு; கரூர் கலெக்டர் தொடங்கி வைப்பு
ராணுவ வீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு; கரூர் கலெக்டர் தொடங்கி வைப்பு
ராணுவ வீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு; கரூர் கலெக்டர் தொடங்கி வைப்பு
ADDED : டிச 09, 2024 07:03 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ராணுவ வீரர் கொடி நாள் நிதி சேகரிப்பை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் வீரமரணமடைந்த, காயமடைந்த ராணுவ வீரர்கள் ஆகியோரின் சேவையை போற்றும் வகையில், கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் கொடிநாள் நிதி சேகரிக்கப்படுகிறது. கடந்த, 2023-ல் கொடிநாள் நிதியாக நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 97.40 லட்சம் ரூபாய்.
அதில் நாம் இலக்கைவிட அதிகமாக, 1.05 கோடி ரூபாய் நிதி சேகரித்துள்ளோம். இது தவிர கரூர் மாநகராட்சி சார்பில், 4.50 லட்சம் ரூபாய் கொடிநாள் நிதியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இலக்கைவிட அதிகமாக, 5.25 லட்சம் ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இதை, இரண்டு மடங்காக்க நிதி சேகரிக்க முயற்சி செய்யப்படும். ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இருப்பதால் நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறோம்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு முன்னாள் ராணுவத்தினர், குடும்பத்தார்களுக்கும் எந்தவிதமான கோரிக்கை இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் தனி கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் ராணுவவீரர் நல அலுவலக திருச்சி கண்காணிப்பாளர் சங்கர்ராஜா, நல அமைப்பாளர் தாஜீன் உள்பட பலர் பங்கேற்றனர்.