/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு
/
கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு
கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு
கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு
ADDED : ஜூன் 22, 2025 01:27 AM
கரூர், கரூர், வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில், மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர், வஞ்சுலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பிரம்மகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், குளம் இருக்கும் இடம் தெரியாமல் போனது. கடந்த, 2011ம் ஆண்டு திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சார்பில், குளத்தை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, அதே ஆண்டில் குளம் மீட்கப்பட்டு, உபயதாரர்களால் சீரமைக்கப்பட்டது.
குளம் மீண்டும் மாசடைந்ததையடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியனுக்கு, திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மனு அளித்தார். பின், குளத்தில் துாய்மை ஏற்படுத்த வேண்டி, மீன்கள் வளர்க்க வேண்டும் என கூறினார். அதன்படி, நேற்று குளத்தில் மீன்கள் விடப்பட்டது. இதனை, மீன்வளத்துறை கரூர் பிரிவு ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.