/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்களை இலவசமாக எழுதி தர ஏற்பாடு
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்களை இலவசமாக எழுதி தர ஏற்பாடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்களை இலவசமாக எழுதி தர ஏற்பாடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்களை இலவசமாக எழுதி தர ஏற்பாடு
ADDED : அக் 28, 2025 01:26 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனுக்களை இலவசமாக எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை, மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நேற்று நடந்த கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பெரும்பாலானோர் அரசு நல உதவிகள் வேண்டி, மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வருகின்றனர்.
இவர்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில், தன்னார்வலர்கள் இலவசமாக மனு எழுதி கொடுத்து வந்தனர். இப்பணி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. சிலர் அதிக பணம் கொடுத்து மனுக்களை எழுதி வாங்கி கொடுத்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, நேற்று அலுவலக வளாகத்தில் தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக மனு எழுதி தரப்பட்டது. இதை ஏழை மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி கொண்டனர்.