/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்
/
ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்
ADDED : ஜன 04, 2026 07:57 AM
கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுா-ரியில், பள்ளி கல்வியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு செயலிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்பாடுகளை செயலிகள் மூலம் கையாள்வது தொடர்பான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அறங்காவலர் விஜயா ராமகி-ருஷ்ணன், இணை செயலாளர் சரண்குமார், நிறு-வன வளர்ச்சி இயக்குனர் சக்திஸ்ரீ, செயல் இயக்-குனர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

