தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிரேன் மோதி உதவியாளர் பலி

கிரேன் மோதி உதவியாளர் பலி

கிரேன் மோதி உதவியாளர் பலி


ADDED : பிப் 06, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அருகே, கிரேன் மோதி உதவியாளர் உயிரிழந்தார்.

குளித்தலையில், உத்தரபிரதேச மாநிலம், மகேபாகர் பகுதியை சேர்ந்தவர் ஜோலா பிரசாத், 50. இவர் கிரேன் டிரைவரராக வேலை செய்து வந்தார். ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம், மெகதாவில் சஜீவன் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார், 37. உத்த-ரபிரதேசம் மாநிலம், கஞ்சன்பூரை சேர்ந்தவர் பிரிசிலால், 38. இவர்கள் மூவரும் சேலம் மாவட்டம், மேட்டூரில் சம்பத் என்பவ-ரது கிரேன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த, 4ம் தேதி மதியம் 3:00 மணிக்கு திருச்சிக்கு சென்று விட்டு, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். குளித்தலை முசிறி காவேரி பாலம் அருகே, பெட்ரோல் பங்க்கில் வாகனத்தை நிறுத்தி, உதவியாளராக இருந்த அஜித்குமார் முன்பக்கம் டயரை சோதித்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது, பிரிசிலால் கவ-னக்குறைவாக வாகனத்தை எடுத்ததால், அஜித்குமார் மீது மோதி-யதில் பலத்த காயம் ஏற்பட்டது.

கீழே மயங்கி கிடந்த அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவ-மனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அஜித்-குமாரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஜோலாபி-ரசாத், 50, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் பிரிசிலால் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us