/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை
/
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை
ADDED : நவ 13, 2024 07:38 AM
கரூர்: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சாயக்கழிவு பிரச்னையால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, 2019 ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.90 அடி நீர்மட்டம் எட்டியது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆத்துப்பாளையம்அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. நேற்று காலை அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 26.69 அடியாக இருந்தது.கடந்த, 10 நாட்களில் அணையின் நீர்மட்டம், மூன்று அடி வரை உயர்ந்துள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்தால், அணை நிரம்ப வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து, பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.