/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது
/
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : டிச 15, 2024 01:39 AM
கரூர், டிச. 15-
கரூரில், தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகியை தாக்கியதாக, அ.தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ரீகன், 39; தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகி. இவர் கடந்த, 12ல் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு மண்டல அ.தி.மு.க., ஐ.டி., விங்க் துணைத்தலைவர் செந்தில் குமார், 42, ரீகனை தடுத்து நிறுத்தியுள்ளார்.
பிறகு, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து, எதற்காக சமூக வலை தளங்களில் தவறாக பதிவு செய்கிறார் என கூறி ரீகனை, செந்தில் குமார் கல்லால் அடித்துள்ளார். இதுகுறித்து, ரீகன் அளித்த புகார்படி, செந்தில்குமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கரூரை சேர்ந்த பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன், 43, என்பவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் மிரட்டியதாக செந்தில் குமார் மீது, மற்றொரு வழக்கையும், கரூர் டவுன் போலீசார் கடந்த, 9ல் பதிவு செய்துள்ளனர்.