/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரங்களை வெட்டி கடத்த முயற்சி: லாரி பறிமுதல்
/
மரங்களை வெட்டி கடத்த முயற்சி: லாரி பறிமுதல்
ADDED : ஏப் 21, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த தளிஞ்சி கிராம சாலையில், அரசுக்கு சொந்தமான புளியமரம், வேப்பமரம் ஆகியவற்றை அரசு அனுமதியின்றி வெட்டி, லாரியில் ஏற்றி கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ., விஜயேந்திரனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் வி.ஏ.ஓ., விஜயேந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், வெட்டிய மரங்களை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அங்கு, வி.ஏ.ஓ., வருவதை பார்த்த நபர்கள், தப்பி ஓடினர். இதையடுத்து, மரங்களை கடத்த பயன்படுத்திய லாரி, வெட்டிய மரங்களை கைப்பற்றி, நங்கவரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

