ADDED : செப் 24, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம்
அருகே, கூலி தொழிலாளியிடம் மொபைல் போன், தங்க மோதிரத்தை பறிக்க
முயன்ற, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம்,
விஸ்வநாதபுரி செங்கமலை தெருவை சேர்ந்தவர் பூபதி, 26, கூலி
தொழிலாளி. இவர் கடந்த, 20ல் வேலாயுதம்பா ளையம் அருகே, அய்யம்பாளையம்
பகுதியில் அமர்ந்து கொண்டு, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது,
பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், பூபதியிடம் இருந்து
மொபைல் போன் மற்றும் தங்க மோதிரத்தை பறிக்க முயன்றனர். இதனால், பூபதி
கூச்சலிட்டதால், மூன்று பேரும் தப்பினர். இதுகுறித்து, பூபதி
போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
