தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலையில் நாளை உயர்வுக்கு படி முகாம்

குளித்தலையில் நாளை உயர்வுக்கு படி முகாம்

குளித்தலையில் நாளை உயர்வுக்கு படி முகாம்


ADDED : செப் 24, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:குளித்தலையில், உயர்வுக்கு படி முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குளித்தலை, அய்யர்மலை அரசு கலை கல்லுாரியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்வுக்கு படி முகாம் நாளை (25ம் தேதி) நடக்கிறது. தொடர்ந்து, 28ல், கரூர் தான்தோன்றிமலை அரசு கலை

கல்லுாரியில் நடக்கிறது. முகாமானது 2024-25, 2025-26ம் கல்வியாண்டுகளில் பள்ளி படிப்பை முடித்தும், இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

முகாமில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு, பிளஸ் 2க்கு பிறகு பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவ படிப்பு, வேளாண் சார்ந்த படிப்பு, பல்வகை தொழில்நுட்ப படிப்பு, தொழிற்பயிற்சி மைய படிப்பு, ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்பு சார்ந்த விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.

கல்லுாரியில் நேரடி சேர்க்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. முகாமில் உயர்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறை, உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பு போன்றவைகள் குறித்த தகவல் வழங்கப்படவுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us