ADDED : செப் 24, 2026 06:51 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்.,ல், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 15
வார்டுகள் உள்ளன.
இந்த
வாரம் பெய்த மழையால், மக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில், டெங்கு
நோய் விழிப்புணர்வு முகாம், ஒவ்வொரு வார்டு வாரியாக செயல் அலுவலர்
அண்ணாமலை தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம், மற்றும்
துாய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதேபோல்,
நங்கவரம் டவுன் பஞ்., பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில்,
செயல் அலுவலர் காந்தரூபன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்,
பரப்புரையாளர், துாய்மை பணியாளர் மூலம் டெங்கு நோய் விழிப்புணர்வு
முகாம் நடத்தப்பட்டது. பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு டெங்கு
நோய் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தொற்று நோய் வராமல் தடுக்கும் வகையில், துாய்மை பணியாளர்கள் மூலம் புகை தெளிப்பான் மூலம் கொசுக்கள் விரட்டப்பட்டன.
டவுன் பஞ்., தலைவர்கள் மருதுார் சகுந்தலா, நங்கவரம் ராஜேஸ்வரி மற்றும் துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர்.
