பஸ்சுக்காக காத்திருந்தவரை அடித்த ஆட்டோ டிரைவர் கைது
பஸ்சுக்காக காத்திருந்தவரை அடித்த ஆட்டோ டிரைவர் கைது
ADDED : அக் 19, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
கரூர்:பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தவரை அடித்த ஆட்டோ டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர்
வடக்கு காந்தி கிராமம், அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர்
வெங்கடேஷ், 49; இவர் கடந்த, 16 இரவு, கரூர் அருகே, திருகாம்புலியூர்
ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, டூவீலரை நிறுத்தி விட்டு, கோவையில் இருந்து
பஸ்சில் வரும் மகளை அழைத்து செல்ல காத்திருந்தார்.
அப்போது, கரூர்
ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் எழிலரசன், 46,
டூவீலரை நிறுத்த கூடாது எனக்கூறி, வெங்கடேசை அடித்துள்ளார்.
இதுகுறித்து, வெங்கடேஷ் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார்
ஆட்டோ டிரைவர் எழிலரசனை கைது செய்தனர்.
