/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா
/
மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா
ADDED : செப் 05, 2025 01:30 AM
கரூர், மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகில் மாவத்துார் பஞ்.,க்குட்பட்ட பசுபதிபாளையம் மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆவணி மாத திருவிழா நடந்தது. பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவில் படித்துறையில் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், கோவில், வீட்டிலிருந்து பூஜை கூடைகள் எடுத்து வரப்பட்டது. பொங்கல் வைத்து, மாரியம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின், அனைத்து சுவாமிகளுக்கும் விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி, திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது