/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
/
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2025 01:47 AM
குளித்தலை, குளித்தலையில், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குளித்தலை சுங்ககேட்டில், நேற்று மதியம் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
இரு சக்கர வாகனங்களில் செல்வோரில், பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தலையில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஹெல்மெட் அணிவதால், 74 சதவீதம் தலையில் காயங்கள் ஏற்படாமல், உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தினந்தோறும் இப்பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு பேசினார்.இதையடுத்து, ஹெல்மெட் இல்லாத வாகனங்களை ஓட்டி சென்றவர்களுக்கு, இலவசமாக ஹெல்மெட்டுகளை போலீசார் வழங்கினர். குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் உடனிருந்தனர்.