/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
/
புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 06, 2025 01:22 AM
கரூர், புகழூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அதில், தீக்காயம் ஏற்பட்டால் அளிக்கப்பட வேண்டிய முதலுதவி, எளிதில் தீ பிடிக்காத வகையில் உள்ள ஆடைகளை அணிதல், கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், கட்டுப்படுத்தும் முறைகள், தீ விபத்து ஏற்பட்ட காஸ் சிலிண்டரை அணைக்கும் முறை, உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் குறித்து, தீயணைப்பு துறை வீரர்கள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. முகாமில், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், ஊழியர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.