/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.பி.எப்., போலீஸ் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
/
ஆர்.பி.எப்., போலீஸ் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
ஆர்.பி.எப்., போலீஸ் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
ஆர்.பி.எப்., போலீஸ் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 23, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, பயணிகள் ஊர்களுக்கு திரும்பி வருவதால், ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பயணிகள் தங்களது உடமைகள் மற்றும் மொபைல்போன்களை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும், பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, கரூர் ரயில்வே ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் நேற்று நடந்தது.
இதில் ஆர்.பி.எப்., போலீஸ் எஸ்.ஐ., கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரயில் பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தங்களுடைய பொருட்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் குறித்து விளக்கமாக எடுத்து கூறினர்.