/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி கல்லுாரியில் கலை திருவிழா நிறைவு
/
அரவக்குறிச்சி கல்லுாரியில் கலை திருவிழா நிறைவு
ADDED : அக் 23, 2025 02:04 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த ஒரு மாதமாக நடந்த கலை திருவிழா நிறைவு பெற்றது.
தமிழ்நாடு அரசு வழங்கிய நிதியுதவியுடன் கல்லுாரி மாணவ, மாணவியருக்காக கலைத்துறை சார்ந்த, 82 போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து மாணவர்களும், குறைந்தது ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விழா நடந்தது. நிறைவு விழாவில் வணிகவியல் துறை தலைவர் செந்தில்குமார்
வரவேற்றார். முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்து பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், அடுத்த கட்டமாக பல்கலைக்கழக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அங்கு வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்க
உள்ளனர்.