/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டாசு வெடிப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
/
பட்டாசு வெடிப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
பட்டாசு வெடிப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
பட்டாசு வெடிப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2024 11:43 PM
கரூர்:கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய
தொடக்க பள்ளியில், தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது
எப்படி என்பது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி
தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மனோகர்,
வெங்கடேசன் பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பழைய தண்ணீர் பாட்டிலை இரண்டாக வெட்டி, மூடி உள்ள பகுதியை கையில்
மாட்டிக் கொண்டு கம்பி மத்தாப்பு சுற்றுவது குறித்து விளக்கம்
அளித்தனர். பறவைகள், விலங்குகள் வாழும் பகுதி, பெட்ரோல் நிலையம்,
குடிசைப் பகுதி, நுாலகம், மருத்துவமனை, எளிதில் தீப்பற்றக் கூடிய
இடங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என வலியுறுத்தும்
வாசகங்களை காட்சிப்படுத்தினர். பட்டாசுகளை உடனடியாக தண்ணீர்
ஊற்றி அழித்து விட வேண்டும் எனவும், கைகளை கழுவிய பின்னரே இனிப்பு
உள்ளிட்ட உணவுகளை உண்ண வேண்டும் என வலியுறுத்தினர்.

