ADDED : பிப் 10, 2025 07:14 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பெண்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
வேலுார் அருகே, ஓடும் ரயிலில் ரேவதி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், வாலிபர் ஹேமராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அப்போது, ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு, நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே துறை போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ரயில்களில், பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில், ரயிலில் பயணம் செய்யும்போது பாலியல் தொந்தரவு இருந்தால், 1391512 என்ற உதவி எண்ணுக்கு போன் செய்வது, அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்துவது குறித்து, கரூர் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.