/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுற்றுச்சூழல் துறை சார்பில் விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழல் துறை சார்பில் விழிப்புணர்வு
ADDED : பிப் 16, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில், சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்-ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அதில், காற்று, நீரில் மாசுபாடு குறைத்தல், மின்சாரம் சேமிப்பு குறித்து, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி பேசினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு கோலப் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில், பள்ளி தலைமையாசிரியர் பரிமளா தீபா, ஆசிரியைகள் சுமதி, அஞ்சுகம், கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.