/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
/
பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2025 01:36 AM
கரூர், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், போக்சோ குற்றங்கள் குறித்த தகவல், போதை பொருட்கள் தவிர்ப்பது, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஏற்படும் பாதிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது குறித்த அவசியம் குறித்து, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சுபாஷினி, கண்ணன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யுவராஜா, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, மாணவர் படை ஆசிரியர் பொன்னுசாமி, உயர்க்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.