/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விழிப்புணர்வு
/
மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விழிப்புணர்வு
மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விழிப்புணர்வு
மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2026 05:33 AM

கரூர்; கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மின்னணு ஓட்-டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, ஓட்டுப்பதிவு இயந்தி-ரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வரும், 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம், பொதுமக்களுக்கு ஓட்டு போடும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதில், ஓட்டுச்சாவடி மையத்தில் பெயர்களை பதிவு செய்வது, ஓட்டு போடுவது, ஓட்டளிப்பை உறுதி செய்வது குறித்து வாக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
நாடு முழுவதும் நாளை (25ல்) வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் தங்க வேல் மற்றும் பல்வேறு துறை-களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழி-யர்கள் பங்கேற்றனர்.

