/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 05, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், குமார-பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அளிப்பது
இன்றியமையாதது என்ற விழிப்புணர்வை வலியு-றுத்தி, பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள்
உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையால், உறுதிமொழி
எடுத்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர் தேவி உள்பட பலர்
பங்-கேற்றனர்.