/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 28, 2024 01:05 AM
சமையல் எரிவாயு குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி, நவ. 28-
அரவக்குறிச்சி பேரூராட்சியில் பணியாற்றும், துாய்மை பணியாளர்களுக்கு சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அரவக்குறிச்சி இண்டேன் காஸ் விற்பனையாளர் சண்முகா ஏஜென்சி சார்பில், சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் தலைமை
வகித்தார்.
இந்நிகழ்வில், அரவக்குறிச்சி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, சமையல் எரிவாயு உபயோகித்தல் மற்றும் விபத்து தடுப்பு குறித்த வழிமுறைகளையும், விபத்தின் போது பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் பற்றியும் எடுத்து
கூறப்பட்டது.