ADDED : அக் 26, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம், புகழூர் நகராட்சி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை, நகராட்சி தலைவர் குணசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், புகையிலையை தவிர்க்க வேண்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
பேரணியில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், மூத்த ஆசிரியர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

