/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு
/
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு
ADDED : நவ 21, 2024 01:39 AM
கரூர், நவ. 21-
கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியில் ராகிங் தொடர்பான விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை முற்றிலுமாக தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அதற்கென புதிதாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்றி, கல்லுாரிகளில் கண்காணிப்பு நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் ராகிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'ராகிங் சம்பவங்களுக்கு நடவடிக்கை' என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில், 'தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் படி, ராகிங் செய்யும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். அரசு கல்வி உதவிகள் நிறுத்தப்படும் அல்லது திரும்ப பெறப்படும். எந்த தேர்வும் எழுத முடியாது அல்லது தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும். அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் உள்பட பல்வேறு தண்டனை, விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவ, மாணவிகளுக்கான ராகிங் விழிப்புணர்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மருத்துவக் கல்லுாரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

