/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை போலீசார் சார்பில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
/
தோகைமலை போலீசார் சார்பில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
தோகைமலை போலீசார் சார்பில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
தோகைமலை போலீசார் சார்பில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
ADDED : நவ 17, 2025 03:42 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., பேரூர் கிராமத்தில், தோகைமலை போலீசார் சார்பில், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
. டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், திருட்டு, வழிப்பறி, பொது இடங்களில் தகராறு, அரசு சொத்-துக்கள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., பாஸ்கர், லையில் செல்லும்போது கார், பைக், கனரக வாகனங்கள் சாலை விதிகளை பின்பற்றி இயக்க வேண்டும். டூவீலரில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள், சீட்பெல்ட் அணிய வேண்டும். மொபைல் போன் பேசியபடி வாகனத்தை ஓட்டக்கூ-டாது. மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அளவுக்கு அதி-கமாக பொருட்களை கனரக வாகனத்தில் ஏற்றி செல்லக்கூடாது என்பன குறித்து பேசினார்.
மகளிர் எஸ்.எஸ்.ஐ., சுமதி, குழந்தை திருமணம் தடுத்தல்; பெண் பாதுகாப்பு; பெண் உரிமை; பெண்களை பொது இடத்தில் இழிவாக பேசுதல்; பெண்களை வன்கொடுமை செய்தல்; போக்சோ சட்டத்தின் பாதிப்புகள் குறித்தும் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தி பேசினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பேரூர் கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வணிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

