/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
/
கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
ADDED : நவ 18, 2025 01:28 AM
கரூர், கார்த்திகை மாதம் தொடங்கியதால், கரூரில் ஐயப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.கேரள மாநிலம், சபரி மலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக, நேற்று காலை நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில், 48 நாட்கள் விரதம் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.கரூர் ஐயப்பன் சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை மூலவர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அதேபோல், வெண்ணைமலை ஐயப்பன் கோவில், கருப்பத்துார் ஐயப்பன் கோவில், காந்தி கிராமம் ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, நேற்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துாரில் காவிரி கரை அருகில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கார்த்திகை மாதம் பிறப்பை முன்னிட்டு சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஆற்றில் குளித்து விட்டு ஐயப்பனை வழிபட்டனர். பின் கழுத்தில் மாலை அணிந்து, ஐயப்பனை வழிபட்டு முறைப்படி விரதத்தை தொடர்ந்தனர்.
கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, புலியூர், லாலாப்பேட்டை, அய்யர்மலை, திம்மாச்சிபுரம், வதியம், மகாதானபுரம், பிள்ள பாளையம், வல்லம், வேங்காம்பட்டி, பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு கோவிலில் உள்ள குரு சுவாமிகள் மாலை அணிவித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

