ADDED : டிச 09, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்-கொண்டத்தில், புதிதாக ஐயப்பன் கோவில் கட்-டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா-வையொட்டி, கடந்த, 5ல் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்-தனர்.
தொடர்ந்து, கணபதி பூஜை, எஜமானர் சங்-கல்பம், விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, முதற்கால, இரண்டாம் கால, முன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை செய்து, ஐயப்பன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின், தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பழைய ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்-வாகம் செய்திருந்தது.

