/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை ரோப்கார் இன்று முதல் செயல்படும்
/
அய்யர்மலை ரோப்கார் இன்று முதல் செயல்படும்
ADDED : செப் 24, 2024 01:09 AM
குளித்தலை: அய்யர்மலை ரோப்கார் இன்று முதல் மீண்டும் செயல்படுகிறது.குளித்தலை அருகே, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஒன்பது கோடியே, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோப்கார் ஊர்-தியை, கடந்த ஜூலை, 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மறுநாள் அதிக காற்று வீசியதால் கம்பி வளையத்தில் இருந்து விலகியது. இதனால் பழுது ஏற்பட்டு செயல்படவில்லை. இரண்டு முறை வல்லுனர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின் அவர்கள் அதற்கான அறிக்கையை
முதல்வரிடம் சமர்ப்பித்-தனர்.இந்நிலையில் இன்று (24ம் தேதி) முதல் ரோப்கார் மீண்டும் செயல்படும் என, கோவில் செயல் அலுவலர் தங்கராஜூ தெரி-வித்தார்.