ADDED : அக் 02, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழை இலை
விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம், அக். 2-
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், விலை குறையாமல் உள்ளது.
வாழை இலை ஒன்று மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும் ஹோட்டல்கள் மற்றும் இதர சில்லரை விற்பனை செய்யும் இடங்களுக்கு, வாழை இலைகளை கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.