/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 04, 2025 01:05 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் ராம்குமார் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அனைத்து தனியார் வங்கிகளையும் அரசுடமையாக்க வேண்டும்,
தனியார் வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும், தனியார் வங்கிகளில் ஓய்வூதியர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும், நிரந்தர ஊழியர்களாக்கி, ஓய்வூதிய நிதிக்கு வரி விலக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் சேகர், நிர்வாகிகள் அருணாச்சலம், லோகேஷ்வரன் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

