/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் முறையாக வினியோகம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு
/
குடிநீர் முறையாக வினியோகம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு
குடிநீர் முறையாக வினியோகம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு
குடிநீர் முறையாக வினியோகம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு
ADDED : நவ 04, 2025 01:05 AM
கரூர்,  முறையாக குடிநீர் வினியோகம் செய்ய கோரி, தோகைமலை கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவதுதோகைமலை பஞ்சாயத்தில், 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தும் கூட, வாரம் ஒரு முறை கூட குடிநீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
இதனால், குடிநீர் எடுக்க பல கி.மீ., துாரம் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இங்குள்ளவர்கள் கூலி தொழிலாளர்கள் என்பதால், குடிநீர் எடுக்க சென்றால், வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போதுமான அளவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.