/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் கார்த்திகை தீப விழா மண் விளக்குகள் உற்பத்தி சுறுசுறு
/
நெருங்கும் கார்த்திகை தீப விழா மண் விளக்குகள் உற்பத்தி சுறுசுறு
நெருங்கும் கார்த்திகை தீப விழா மண் விளக்குகள் உற்பத்தி சுறுசுறு
நெருங்கும் கார்த்திகை தீப விழா மண் விளக்குகள் உற்பத்தி சுறுசுறு
ADDED : நவ 04, 2025 01:06 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கார்த்திகை தீப விழாவுக்காக, மண் விளக்கு கள் தயார் செய்யும் பணிகள்
சுறுசுறுப்படைந்துள்ளன. ஹிந்துகளின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி திருவிழாக்களை அடுத்து,
கார்த்திகை தீப விழா வரும் டிச., 3ல் நடக்கிறது.
இதற்கு, களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அதிகம் தேவைப்படும். இதை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பாக களிமண் விளக்குகளை தயார் செய்யும் பணிகளை, மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம். கரூரில் அண்ணா வளைவு, காளிப்
பாளையம், தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு மற்றும் மாயனுாரில் அதிகளவில் மண் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, கோவில்களில் நாள்தோறும் பயன்படுத்தப்படும், ஐந்து முகம், ஒரு முகம் கொண்ட மண் விளக்குகள் மற்றும் சிறிய அளவிலான விளக்குகள் மின் மோட்டார் மூலம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தீப விழாவுக்கு, ஒரு மாதமே உள்ள நிலையில், களிமண் விளக்குகளை உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இது குறித்து மண் விளக்கு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
களிமண் விளக்குகளை, வெயிலில் காய வைத்து, சூளையில் வைத்து சுட வேண்டும். இல்லையென்றால், விளக்கு தரமாக இருக்காது. தற்போது மொத்த வியாபாரி களுக்கு, 100 சிறிய விளக்குகள், 100 ரூபாய், பெரிய விளக்குகள், 120 ரூபாய், ஐந்து முகம் கொண்ட விளக்கு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரூர் மட்டுமின்றி ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

