ADDED : செப் 12, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பொதுச்செயலாளர்
பிரசாந்த் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
அதில், வங்கி துறையில் ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த
வேண்டும், பி.எல்.ஐ., திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வங்கி
ஊழியர்களின் நிலுவையில் உள்ள, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,
வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி,
பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், வங்கி தொழிற்சங்க
கூட்டமைப்பு நிர்வாகிகள் ரங்கன், மது, அன்பழகன், சத்தியபிரியா,
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர்
வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
