/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி 38 வது வார்டில்அடிப்படை வசதிகள் தேவை
/
மாநகராட்சி 38 வது வார்டில்அடிப்படை வசதிகள் தேவை
ADDED : டிச 18, 2024 01:48 AM
கரூர், :கரூர் மாநகராட்சி, 38வது வார்டு பாலாஜி அபார்ட்மென்ட் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் தேவை என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 38-வது வார்டில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாலாஜி அபார்ட்மென்ட் குடியிருப்பு பகுதியில், 20 ஆண்டுகளாகியும் சில இடங்களில் மண் சாலைகள்தான் உள்ளன. அதில், கருப்பக்கவுண்டன் புதுார், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலைகள், மண் சாலையாக
உள்ளது.ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையில், குளம்போல மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உருவாகி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடையோ, கழிவு நீர் வாய்க்கால் வசதியோ இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகளில் செல்வதால் சுகாதாரக்கேடு
ஏற்படுகிறது. இப்பகுதியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.