sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் வெற்றிலையில் கருவங்கு நோய் பரவல்

/

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் வெற்றிலையில் கருவங்கு நோய் பரவல்

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் வெற்றிலையில் கருவங்கு நோய் பரவல்

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் வெற்றிலையில் கருவங்கு நோய் பரவல்


ADDED : மார் 17, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர், கோவக்குளம், பிச்சம்பட்டி, சிந்தலவாடி, பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கொம்-பாடிப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் பரவலாக வெற்-றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்-கின்றனர். தற்போது, வெற்றிலை செடிகளில், 'கருவங்கு' நோய் பரவி வருகிறது. இதனால் வெற்றிலை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்-ளது. செடிகள் கருகுவதால், வெற்றிலை வரத்து சரிந்துள்ளது.இதுகுறித்து வெற்றிலை விவசாயி முருகேசன் கூறியதா-வது:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக வெற்றிலை சாகு-படி செய்யப்படுகிறது. வெயில், மழை, பனிப்பொழிவு என, சீதோஷ்ணம் மாறி மாறி நிலவுவதால், பசுமையாக வளர்ந்த வெற்-றிலை செடிகளில், 'கருவங்கு' நோய் பரவி வருகிறது. ஒரு செடியில் வந்தால், தொடர்ந்து மற்ற செடிகளுக்கும் பரவிவிடுகி-றது. இதனால், வெற்றிலை கொடிகளில்

வெற்றிலை உற்பத்தி சரிவு கண்டு வருகிறது. தரமான வெற்-றிலை, 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கவுளி, 75 ரூபாய்க்கும்; 100 கவுளி கொண்ட மூட்டை, 7,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், 100 கவுளி கொண்ட மூட்டை, 6,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, ஒரு மூட்டைக்கு, 1,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு மகிழ்ச்சியளித்-தாலும், நோய் பரவல் காரணமாக விவசாயிகளுக்கு செலவு அதிக-ரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us