/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணிகள் தொடக்கம்
/
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணிகள் தொடக்கம்
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணிகள் தொடக்கம்
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணிகள் தொடக்கம்
ADDED : செப் 13, 2025 01:48 AM
கரூர், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், கார்த்திகை பட்டத்தில், வெற்றிலை கொடிக்கால் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் புகழூர், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், வெற்றிலை சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது. தற்போது, கார்த்திகை பட்டத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணிகள் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக வரும், 17ல் புரட்டாசி மாதம் தொடங்கும் நிலையில், அகத்திக்கீரை விதை நடும் பணியை தொடர்ந்து, வெற்றிலை கொடிக்கால் நடவு செய்யும் பணிகள், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தொடங்க உள்ளது. ஆறு மாதங்களுக்கு பிறகு, வெற்றிலை வர தொடங்கும்.
இதுகுறித்து, வெற்றிலை விவசாயிகள் கூறிய தாவது:
மேட்டூர் அணையில் இருந்து, குறைந்த தண்ணீரே வரும் நிலையில் மழை, கிணற்று பாசனம், நிலத்தடி நீரை நம்பி வெற்றிலை கொடிக்கால் நடவுப் பணியை தொடங்கியுள்ளோம். வழக்கமாக ஒரு ஏக்கரில் வெற்றிலை கொடிக்கால் நடவு செய்ய, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போர்வெல் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்ச, 50 ஆயிரம் வரை செலவாகிறது. வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்தால், சாகுபடி செலவு குறைய வாய்ப்புள்ளது. வெற்றிலை கொடிக்கால் நடவுகளை எடுத்தல், வெற்றிலை பறித்தல் போன்ற விவசாய பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கும் அதிகளவில், கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இருப்பினும், கிருஷ்ண ராயபுரம் வட்டாரத்தில் விளையும் வெற்றிலைக்கு, நல்ல மவுசு உண்டு என்பதாலும், பாராம்பரிய தொழிலை கை விடக்கூடாது என்பதாலும், கார்த்திகை பட்டத்தில் வெற்றிலை கொடிக்கால் நடவு பணியை தொடங்கியுள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.