/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
/
பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : ஜூலை 30, 2025 01:43 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கள்ளையில், ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார மைய கட்டடம் பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
வேங்கடத்தான்பட்டி சாலை முதல், மஞ்சம்பட்டி வழியாக அங்காளம்மன் கோவில் வரை சாலை மேம்படுத்துதல் ரூ.73.45 லட்சம், கீழவெளியூரில் புதிய பயணியர் நிழற்கூடம் கட்ட, ரூ.5.50 லட்சம், தோகைமலை பஞ்., குறிஞ்சி நகரில் புதிய நாடக மேடை அமைக்க, ரூ.7 லட்சம் மதிப்பிலும், பொன்னம்பட்டி யூனியன் தொடக்கப்பள்ளி
யில், புதிய கூடுதல் வகுப்பறை கட்ட, ரூ. 39 லட்சம் மதிப்பிலும், கழுகூரில் பல்நோக்கு மைய கட்டடம் ரூ.7 லட்சம் மதிப்பிலும், கழுகூர் பஞ்., உடையாப்பட்டியில் புதிய துணை சுகாதார மைய கட்டடம் ரூ.45 லட்சம் மதிப்பிலும் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது.
மேலும், கீழவெளியூரில் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலும், திருமலை நகரில் ரூ.25.6 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்ட சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமர், முன்னாள் யூனியன் துணைத் தலைவர் சின்னவழியான், பஞ்சாயத்து தலைவர்கள் கள்ளை கருப்பையா, கழுகூர் சசி, நகர துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.