/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இணை சார் பதிவாளர் ஆபீசுக்கு பூமி பூஜை
/
இணை சார் பதிவாளர் ஆபீசுக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 22, 2025 01:08 AM
மண்மங்கலத்தில், புதிய இணை சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி, 3வது மண்டலத்தில் வார்டு, 13, 18, 12, 17, 19 பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் அளவுகளை அதிகப்படுத்த, நெரூர் சதாசிவம் கோவில் அருகில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணற்றில், புதிய ஊடுருவல் கிணறு அமைக்கும் பணி, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இப்பகுதிகளுக்கு ஏற்கனவே, 1.8 எம்.எல்.டி., குடிநீரின் அளவு தற்போது, 2.6 எம்.எல்.டி., குடிநீர் வழங்கும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எட்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், இனி ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்க முடியும். மண்மங்கலம் இணை சார் பதிவாளர் அலுவலகம், 2.58 கோடி மதிப்பில் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம், 15 சென்ட் நிலத்தில் தரைத்தளம், முதல் தளம் என, 482.33 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.