/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்-மொபட் மோதல்; நான்கு பேர் படுகாயம்
/
பைக்-மொபட் மோதல்; நான்கு பேர் படுகாயம்
ADDED : பிப் 07, 2024 11:45 AM
குளித்தலை: லாலாப்பேட்டை அருகே, மொபட் மீது பைக் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
குளித்தலை அடுத்த, கிருஷ்ணயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 44, விவசாய கூலி தொழிலாளி. இவர் டி.வி.எஸ்., எக்ஸெல் சூப்பர் மொபட்டில் மனைவி பாக்கியலட்சுமி, 39, மகன் ஹரித், 4, உறவினர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சச்சின், 20, ஆகியோருடன் சொந்த வேலையாக லாலாபேட்டை சென்றனர். பின்னர் வீட்டுக்கு திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் சிந்தலவாடி காலனி பிரகாஷ் வீட்டின் அருகே சென்ற போது, எதிரே வந்த பல்சர் பைக் ஓட்டி வந்தவர் மொபட் மீது மோதினார்.
இதில் கணவன், மனைவி, மகன் மற்றும் உறவினர் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன், நான்கு பேரும் மீட்கப்பட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பெரியசாமி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயனுார் அங்கு நகரை சேர்ந்த சுபாஷ், 21, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

