/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிப்பர் லாரி மோதியதில் பைக்கில் சென்றவர் பலி
/
டிப்பர் லாரி மோதியதில் பைக்கில் சென்றவர் பலி
ADDED : ஜூலை 03, 2025 01:28 AM
கரூர், கரூர் அருகே, பைக் மீது டிப்பர் லாரி மோதியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், காதப்பாறை ஸ்கந்தன் நகரை சேர்ந்தவர் தண்டபாணி, 41; இவர் கடந்த, 30ல் இரவு கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருகாம்புலியூர் பகுதியில் ஹீரோ பேஷன் புரோ பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக கரூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, 47, என்பவர் ஓட்டி சென்ற டிப்பர் லாரி, தண்டபாணி மீது மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த தண்டபாணி, அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, தண்டபாணியின் சகோதரர் ரவிச்சந்திரன், 45, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.